Header
AGRI & ALL TRADE CHAMBER
...enhancing our GDP Estd: 2010
Agro Food Trade Centre Campus (AFTC)
வேளாண்மை மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம்
Sikkanthar Chavadi, Alanganallur Road, MADURAI - 625 018.
Header
AGRI & ALL TRADE CHAMBER
...enhancing our GDP Estd: 2010
Agro Food Trade Centre Campus (AFTC)
வேளாண்மை மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம்
Sikkanthar Chavadi, Alanganallur Road, MADURAI - 625 018.
Thursday, November 20, 2025
AGRI & ALL TRADE CHAMBER
AGRI & ALL TRADE CHAMBER
...enhancing our GDP
Home Genesis

Genesis

by admin

உருவான வரலாறு

வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் துவக்க விழா 29-01-2010 அன்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. வர்த்தக சங்கத்தை, மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க.அழகிரி அவர்கள் துவக்கி வைத்தார்கள். நம் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், வேளாண் உணவு வர்த்தக மையத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு S.இரத்தினவேல் அவர்கள் எழுதிய ஓர் புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக துணை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், குன்றக்குடி ஆதீன பீடம் மடாதிபதி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் திரு ஐ.பெரியசாமி, தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு கே.ஆர். பெரியகருப்பன், திரு P.மூர்த்தி, M.L.A., திரு கோ.தளபதி M.L.A., அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் திரு கருமுத்து தி. கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இச்சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது.
மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க.அழகிரி அவர்கள் 29.01.2010-ம் நாள் சங்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள். அருகில் நிர்வாகிகள்.
 
விழாவில் தமிழக துணை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்.

வேளாண் துறைக்கும் தொழில் வணிகத் துறைக்கும்
இணைப்புப் பாலமாக
“வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம்.”

– தலைவர் திரு S.இரத்தினவேல் வரவேற்புரை
நமது சங்கத்தின் தலைவர் திரு S.இரத்தினவேல் அவர்கள் தனது வரவேற்புரையில், “இன்று வேளாண் தொழிலில் இளைஞர்கள் ஈடுபடுவதற்குத் தயங்குகிறார்கள். இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் வேளாண் தொழிலுக்கு யாருமே வராத ஓர் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் தற்போது வேளாண் தொழிலில் செலவுகள் அதிகமாகிவிட்டன; அதே நேரத்தில் அவர்களுக்கு வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நிலையை மாற்றினால் தான் எதிர்காலத்தில் இளைஞர்கள் வேளாண்மையையும் ஓர் தொழிலாக ஏற்று ஈடுபட முன்வருவார்கள். ஆகவே, வேளாண் பெருமக்களிடம் பழங்காலத்தைப்போல் இயற்கை வேளாண் முறையை (Organic Farming) கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு தொழில் துறைக்குத் தேவையான எந்தப் பயிர் வகைகளைப் பயிரிடலாம் என்பதையும் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் மூலம் எடுத்துக் கூறவிருக்கிறோம். இதன் மூலம் விளைபொருளை உற்பத்தி செய்கின்ற வேளாண் பெருமக்களுக்கும் அவற்றை பல்வேறு மதிப்புக்கூட்டப்பெற்ற பொருட்களாக மாற்றுகின்ற தொழில், வணிகப் பெருமக்களுக்கும் ஓர் இணைப்பு ஏற்படும். “Industrial Linkage Empowers Agriculture” என்பது நமது சங்கத்தின் நம்பிக்கை.
விளைபொருட்களிலிருந்து பல்வேறு மதிப்புக் கூட்டப்பெற்ற பொருட்களை படைப்பாற்றலுடனும், புதுமையாகவும் (Creative and Innovative) தயார் செய்கின்ற தொழில் வணிகத் துறையினருக்கு தயாரிப்பிலும், சந்தைப்படுத்துதலிலும் நவீன தொழில் நுட்ப பயிற்சிகள் கொடுத்து அவர்களது மேம்பாட்டிற்காகவும், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சிறிய தயாரிப்பாளர்களும் கூட ஏற்றுமதியாளர்களாக ஆகக்கூடிய வகையில் அவர்களுக்கு தக்க பயிற்சி அளித்து, ஓர் Common Branding கொடுத்து ஏற்றுமதி செய்ய ஊக்கப்படுத்துவதற்காகவும் மற்றும் நுகர்வோரின் தேவையை, எதிர்பார்ப்பை தொழில்துறையினருக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு ஓர் முழுமையான ஆரோக்யமான உணவு கிடைக்கச் செய்யவும், சம்பந்தப்பட்ட வேளாண் பெருமக்கள், பதனீட்டாளர்கள், தயாரிப்பாளர்கள், வணிகப்பெருமக்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்த (integrated) ஓர் அமைப்பாக இந்த சங்கம் செயலாற்றும்.

எந்தத் தொழில் வணிகம் செய்தாலும் இச் சங்கத்தில் அங்கத்தினராகலாம்

வேளாண் உணவுப் பொருட்களில் தொழில் வணிகம் செய்வோர் மட்டுமல்லாது மக்களுக்கு முழுமையான, ஆரோக்யமான உணவு (wholesome food) கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளவர்கள் எந்தப் பொருட்களின் தொழில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும், எந்த professionals-ஆக இருந்தாலும், அமைப்புகளாக இருந்தாலும் இச்சங்கத்தில் இணைந்து பயன்பெறலாம்; ஆலோசனைகள் தெரிவிக்கலாம். அனைத்துத் தொழில் மற்றும் வர்த்தகத்தின் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு (to Boost the Gross Domestic Product of India – GDP) வேளாண் துறை, தொழில் துறை, சேவைத்துறை ஆகிய அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்காக செயல்படவிருக்கும் அமைப்பு இந்த வர்த்தக சங்கம்.
ஆக்கபூர்வமாக மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை சொல்வதுடன், சங்க அங்கத்தினர்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களது கோரிக்கைகளுக்கு தக்க நிவாரணம் பெற்றுத்தரவும் இந்த வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தை உருவாக்கியுள்ளோம். இவ்வமைப்பை நிறுவி தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எனக்கு உறுதுணையாக சங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய செயல் திறன் மிக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். நம் வேளாண் உணவு வர்த்தக மையத்தின் (Agri &All Trade Chamber AATC) Stakeholder Members மற்றும் Utility Members வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தில் அங்கத்தினர்களாக இணைந்துள்ளனர்.
இன்று புதிதாக உருவாகியுள்ள வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தைத் துவக்கி வைக்கப் பொருத்தமானவர் நமது மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க.அழகிரி அவர்கள் தான் என்றால் அது மிகையல்ல. “தொழில்துறை இணைப்பு மூலம் வேளாண்மை வளர்ச்சிபெற்று கிராமப் பொருளாதாரம் முன்னேற்றம் அடையமுடியும்” என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர் நமது அமைச்சர். எனவே அதே நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தை துவக்கிவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டபோது அவர் பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டதை இங்கே மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த அமைப்பு (Agri &All Trade Chamber AATC) அகில இந்திய அளவில் புகழ் பெறக்கூடிய வகையில் மிகச்சிறப்பாகப் பணியாற்றும் என்று உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று கூறி தனது வரவேற்புரையை நிறைவு செய்தார் தலைவர்.
விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திரு S. இரத்தினவேல் பொன்னாடை அணிவிக்கிறார்.

"இந்த அற்புதமான சங்கம், விவசாயிகளின் வாழ்க்கைக்கு மறுமலர்ச்சியாக அமையும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது"-

குன்றக்குடி ஆதீன பீடம் மடாதிபதி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
மேடையில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவர் சார்பாகவும் இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய குன்றக்குடி ஆதீன பீடம் மடாதிபதி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தமது உரையில், “வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத் துவக்கவிழா விவசாய பெருங்குடி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் ஒரு விழாவாக அமைந்துள்ளது; உழவன் கணக்கு பார்த்தால் உலக்கைகூட மிஞ்சாது என்ற பழமொழி ஒரு காலத்தில் இருந்தது. இதனை மாற்ற யார் தான் வருவார்கள் என்று காத்திருந்தபோது, 1999-ல் மதுரை மாநகரத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், “உழவர் சந்தையைத்” துவக்கி வைத்தார்கள்.உற்பத்தி செய்தவர்களே விலையை நிர்ணயம் செய்துகொண்டு இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய வழிவகுத்தன உழவர் சந்தைகள்.”
“உழவர் சந்தை குறித்த தொழில் நுட்பத்தை, அணுகுமுறைகளை பிற மாநிலங்களில் தான் கண்டு வந்த தகவலை நம் இரத்தினவேல் அவர்கள் முதல்வர் அவர்களிடம் தெரிவிக்க, அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் முதல் உழவர் சந்தையை இந்த மதுரை மாநகரத்திலே அன்று துவக்கி வைத்து “இந்த அரிய ஆலோசனையைத் தனக்கு வழங்கியது நண்பர் இரத்தினவேல் தான்” என மேடையில் அறிவித்து அவரையும் பெருமைப்படுத்தியவர் டாக்டர் கலைஞர்.”
அந்த உழவர் சந்தைகளின் பன்முக பரிணாமமாக விவசாயிகளுக்கு நேரடியாக உரம் வழங்கும் திட்டத்தை ஆற்றல் அரசர் திரு மு.க.அழகிரி அவர்கள் இன்றைக்கு அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கெல்லாம் மேலாக என்றைக்கு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள், உற்பத்தி சார்ந்த பொருட்கள் (Processed Products) என்ற நிலைக்கு மாறுகிறதோ அப்போதுதான் விவசாயப் பொருளாதாரம் தொழில் சார்ந்த பொருளாதாரத்தோடு இணைந்து வளர்ச்சியடைய முடியும் என்பதற்கான அடையாளம் தான் இந்த வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம். இந்த அற்புதமான சங்கம், விவசாயிகளின் வாழ்க்கைக்கு மறுமலர்ச்சியாக அமையும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது” என்று வேளாண் உணவுத் தொழிலுக்கான ஓர் சங்கத்தின் தேவையையும் அதன் முக்கியத்துவத்துவத்தையும் மிக தெளிவாக எடுத்துரைத்தார்.
வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் திறப்பு விழா நிகழ்வு "Business Line” பத்திரிகையில்.

Our Company

Newsletter

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

@2024 – All Right Reserved. Designed and Developed by RAJEXIM